Posts

எதுவரைக்கும் கடவுளே? (How Long O God?)

  எதுவரைக்கும் கடவுளே? (How Long O God) சேனைகளின் தேவனே, எங்களைத் திருப்பிக் கொண்டுவாரும். உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும். அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்  (சங்கீதம் 80:3). (From Bower Translation) படைகளின் கடவுளே, எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும். எம்மை மீட்குமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்  (திருப்பாடல்கள் 80:3) (திருவிவிலியத்திலிருந்து) 80ஆம் சங்கீதம் ஒரு சமுதாயப் புலம்பற் பாடலாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இஸ்ரயேல் நாடு, சமாரியாவின் வீழ்ச்சிக்குப் பின் நடைபெற்ற அசீரியப் படையெடுப்பினால் பெரும் துன்பங்களைச் சந்திக்க நேர்ந்தது. பகைவரின் ஒடுக்குதலாலும் அச்சுறுத்தலாலும் பெரும் வேதனையுற்றனர். கண்ணீரே அவர்களுக்கு உணவாகவும், தாகம் தீர்க்கும் தண்ணீராகவும் மாறிற்று. அவர்கள் அண்டை நாட்டாருக்குச் சர்ச்சைப் பொருளானார்கள். அவர்களின் பகைவர் அவர்களை ஏளனம் செய்தனர். கடவுளால் தேர்ந்தெடுக்கப்பெற்ற மக்களினமாகத் திகழ்ந்தோர், தற்போது பெரும் வீழ்ச்சியைச் சந்தித்திருப்பது அவர்களுக்குத் தாங்கொணா வேதனையைத் தந்தது. இச்சூழலில் ஒடுக்கப்பட்ட சமூகமாகக் கடவுளை நோக்கி முறையிடுகின்றனர்,...